• Dec 26 2024

ரவீனாவின் முதலாவது நேர்காணல் .... மனம் விட்டு பேசிய ரவீனா .. பிக் பாஸ் வீட்டில் நேர்மையானவர் இவர் மட்டும் தான் ..

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்ஆனவர் தான் ரவீனா.தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான    இவர் சீரியலில் நடித்து மேலும் ரசிகர்களை தன்வசம் கவர்ந்தவர் .


இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான  பிக் பாஸ் சீசன் 7  ல்  கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த எல்லோருடைய நேர்காணலையும் பார்த்து இருப்போம் . அந்த வகையில் ரவீனாவினுடைய முதலாவது நேர்காணலின் போது அவர் மனம் திறந்து பேசியதை பார்க்கலாம் வாருங்கள் , 


"எல்லோருக்கும் வணக்கம் எல்லோரும் எப்பிடி இருக்கீங்க , நான் ரொம்ப நல்லா இருக்கிறேன் . பிக் பாஸ் வீட்டை விட்டு நான் வந்த பிறகு நான் பொதுஇடங்களுக்கு செல்லும் போது எல்லாம்  என்னைய ரொம்ப வரவேற்றார்கள் மக்கள்   இவ்வளவு அன்பு என் மேல வைத்து இருக்கிறார்கள் என்று நான்  எதிர்பார்க்கவே இல்லை . 

நீங்க எப்பவுமே சிரிச்சிட்டு இருக்கிறது ரொம்ப பிடிச்சி இருக்கு , நீங்க யாரையும் ஹுர்ட் பண்ணாம விளையாடினீங்க  அது பிடித்து இருந்தது , அந்த மாதிரி நிறைய பெயர் வந்து  நிறைய விதமா சொன்னாங்க . 


ஒரு சில விஷயங்களில கோவமும் பட்டு இருக்கிறார்கள் . உங்களால பண்ண முடிந்த விடயத்தை பண்ணாம இருந்திங்க என்று சொல்லி பார்க்க போனால் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருந்தது ரொம்ப நன்றி . 

வீட்டுக்குள்ள யார் உண்மையாய் இருந்தாங்க என்று நான் சொல்ல முடியாது . அநியாயத்துக்கு உண்மையாய் இருந்தாங்க , எல்லோருமே கேம் என்ற ஒரு எண்ணத்தில இருந்தாங்க அதனால என்னால யார் உண்மையாய் இருந்தது என்று சொல்ல முடியாது . 


நான் பிக் பாஸ் வீட்டில ஸ்ட்ராங் போட்டியாளர் என்று நினைத்தது ஜோவிகாவ அனால் அவங்க எங்கயோ மிஸ்டக் பண்ணிட்டாங்க , ஜோவிகாவை தான் நினைத்தேன் . 


பிக் பாஸ் வீட்டில நான் கற்று கொண்டது என்றால் வாழ்க்கையில வேண்ட வேண்டிய அடிகள் எல்லாம் ஒரே மேடையில வேண்டின மாறி இருக்கு .  எனக்கு வாழ்க்கை என்றால் இது தான் என்று பிக் பாஸ் கற்று கொடுத்து இருக்கிறது . 

பிக் பாஸ் வீட்டில் ரொம்ப பிடித்தது என்று சொல்லி ஒருவரை சொல்ல முடியாது . என்னால எனக்கு எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் . 

பிக் பாஸ் வீட்டில  நான் ரொம்ப மிஸ் பண்றது .  பிக் பாஸ்சினுடைய வாய்ஸ் மட்டுமே அதை நான் ரொம்ப மிஸ் பண்றேன் . அவர் என்னுடைய பெயரை கூப்பிட்டாளே ரொம்ப ஹாப்பியா இருக்கும் . டாஸ்க் படிக்கிறதையும் ரொம்ப மிஸ் பண்றேன் . 


பிக் பாஸ் வீட்டில ரொம்ப நேர்மையாய் இருந்தது என்றால் விக்கிரம் மற்றும் அக்சயா  இரண்டு பேருமே ரொம்ப நேர்மையாய் இருந்தார்கள் . 

 இப்ப ஜோடி நிகழ்ச்சி தான் செய்து கொண்டு இருக்கிறேன் . அடுத்த என்ன செய்ய போறன் என்று ஜோடி முடித்த பிறகு தான் முடிவு பண்ணுவேன் ." இவ்வாறு நேர்காணலின் போது பேசியுள்ளார் . 





Advertisement

Advertisement