• Apr 24 2026

மாலையும் கழுத்துமாக ரவி மோகன், பாடகி கெனிஷா..! இணையத்தில் வைரலாகும் காட்சி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரவி மோகன் மற்றும் பிரபல பாடகி கெனிஷா  இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.

அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு வந்த அவர்கள், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர். அவர்களின் வருகையை அறிந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால் சிறு பரபரப்பு ஏற்பட்டது.


தரிசனத்துக்குப் பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது. நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா சாமியின் தரிசன புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ரவி மோகன்  தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெற்று சட்டரீதியாக இன்னும் பிரியாத நிலையில் பாடகி கெனிஷாவுடன்  பொது இடங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் 

 அதே நேரத்தில் இருவருக்கும் இடையில் உள்ள உறவை பற்றி வெளிப்படையாக இன்னும்  தெரிவிக்கவில்லை.  ஒருபுறம் ரவி மோகனுக்கு  ஆதரவு இருந்தாலும் ஆர்த்தி நிலை குறித்து பலரும் தங்களுடைய விவாதங்களை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement