• May 23 2026

அரசியலிலும் நீங்கதான் கெத்து.! விஜய்யின் விஸ்வரூபத்தால் மெய்சிலிர்த்துப் போன ரவிமோகன்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள நிலவரப்படி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

இந்த முன்னிலை, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியுள்ளது.


இந்த சூழ்நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள உணர்ச்சிமிகு பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அவர் தனது பதிவில், “அண்ணா, அதிகாரம் என்பது வழங்கப்படக்கூடியது... ஆனால் மரியாதை என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது; நீங்கள் இவ்விரண்டையும் பெற்றுள்ளீர்கள். இது வெறும் வெற்றியல்ல, நம்பிக்கையின் புரட்சி. நாங்கள் எப்போதும் உங்கள் பக்கமே இருப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு விஜய் கூறிய “கவலைப்படாதப்பா, நல்லதே நடக்கும்” என்ற வார்த்தைகள் தன்னையும் தனது குடும்பத்தையும் உற்சாகப்படுத்தியதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, விஜய்க்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement