தற்போது திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையில் கெத்து காட்டிவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியர் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படம் சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரையும் கவர்ந்துள்ளது.
சூரி நடிப்பில் வெளியாகிய விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தின் சில மணிநேர காட்சிகள் ரீசென்சார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இப்படத்தின் காட்சிகள் முழுவதற்குமான நேர அளவு 2 மணித்தியாலங்கள் 52 நிமிடங்களாக வெளியாகியுள்ள இப்படத்தில் தற்போது சில மணித்தியாலங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நேர அளவினை குறைத்து 2 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களாக ரீசென்சார் செய்து வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் வெற்றிமாறன் சில ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியுள்ளதாகவும் குறித்த காட்சிகளே தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
Listen News!