• Apr 24 2026

என்னது விரைவில் விக்ரமுக்கு ரெட் கார்ட்டா? பூர்ணிமாவிடம் எல்லை மீறிய பேச்சு! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இறுதியாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியானது.


அதன்படி, வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் விஜய் வர்மா மற்றும் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழைய, அக்‌ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜோவிகா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு, வெளியேறினார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விக்ரமுக்கு விரைவில் ரெட் கார்ட் கொடுக்க வேண்டி வருமென, வீடியோ ஒன்று வைரலாகின்றது.

அதன்படி, குறித்த வீடியோவில் கிட்சினில் இருக்கும் பூர்ணிமாவின் அருகில் சென்ற விக்ரம், அவரை மேலும் கீழும் ஒருமாதிரி பார்த்துவிட்டு 'எனக்கு தூக்கமே வரல' என சொல்ல, அதற்கு பூர்ணிமா 'போய் படு வரும்' என சொல்லுகிறார். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement