• Apr 23 2026

ஸ்கெட்ச் போட்ட நெல்சன்.. பொறி பறக்கவிடும் அனிருத்.! எதிர்பார்ப்பை எகிறவைத்த ரெட் ஜெயண்ட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த ஒரு வரலாற்று தருணம் உருவாகியுள்ளது. உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி வெளியாகியதிலிருந்து சமூக வலைத்தளங்கள் முழுவதும் உற்சாகக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.


இந்த பெரும் கூட்டணியை அறிவிக்கும் மாஸான ப்ரோமோ வீடியோ இன்று (பிப்ரவரி 21ஆம் தேதி) மதியம் 12:07 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான Red Giant Movies தனது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சில அப்டேட்கள் வெளியிடப்பட்ட நிலையில், ப்ரோமோ வெளியீட்டிற்கு முன் வெளியான சமீபத்திய பதிவு ரசிகர்களை வெயிட்டிங்கில் வெறியேற்றியுள்ளது.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட பதிவில்,“வரலாறு அரிதாகவே மீண்டும் நிகழும். ஆனால் அது நிகழ்ந்தால் தலைமுறைகள் கொண்டாடும் பெருவிழாவாக மாறும். நாம் திரையில் பார்த்து வளர்ந்த KH*RK எனும் இரு காவிய நாயகர்களின் திருவிழா இது. உறுதியான எண்ணத்தாலும் கைவண்ணத்தாலும் இந்த வரலாற்று தருணத்தை உருவாக்கிய இயக்குநர் நெல்சனுக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த கொண்டாட்டத்தை மேலும் பொறி பறக்கவிட நம்ம ராக்ஸ்டார் அனிருத்தை விட சிறந்தவர் யார்? இன்று தான் அந்த நாள். நேரம் மதியம் 12:07.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்ச கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இந்த பிரம்மாண்டமான படத்தை இயக்குவது நெல்சன் திலீப்குமார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான கதையம்சங்களும் மாஸ் காட்சிகளும் இணையும் வகையில் திரைப்படங்களை உருவாக்கும் திறமை கொண்ட நெல்சன், இந்த இரு ஐகான்களையும் ஒரே திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement