• Dec 26 2024

மனைவியை மறுபடியும் திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி.. அப்ப மறுபடியும் முதலிரவா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் தனது மனைவியை திரைப்பட விழா நிகழ்ச்சி ஒன்றின் போது திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி என்பதும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் எல்கேஜி, நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது கூட அவர் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா என்பவரை ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்டார் என்பதும் ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது .  

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது ரெடின் கிங்ஸ்லிக்கு வழங்கப்பட்டது. அப்போது திருமணம் குறித்து அவரிடம் கேள்வி கேட்ட போது தன்னுடைய திருமணம் அவசர அவசரமாக நடந்தது என்று கூறினார்.

உடனே நிகழ்ச்சி ஏற்பாடு ஏற்பாட்டாளர்கள் இப்போது மீண்டும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மேடையிலேயே திருமண அரங்கை ஏற்பாடு செய்தனர். இது தெரிந்திருந்தால் நான் அவ்வளவு செலவு செய்து திருமணம் செய்திருக்க மாட்டேன், சாப்பாடு செலவு, மண்டபம் செலவு எல்லாம் மிச்சமாகி இருக்கும் என்று காமெடியாக கூறி சந்தோஷத்துடன் தனது மனைவிக்கு மீண்டும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அப்போ மீண்டும் முதலிரவு உண்டா? என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement