• Dec 26 2024

கல்யாணத்திற்கு முன்பே என் ரகசியங்களை எல்லாம் சொல்லிவிட்டேன்.. ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கல்யாணத்திற்கு முன்பே என் கணவரிடம் என்னுடைய ரகசியங்களை எல்லாம் சொல்லிவிட்டேன் என்று ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களான சந்தானம், சூரி, சதீஷ் உட்பட பலர் தற்போது ஹீரோ ஆகிவிட்ட நிலையில் காமெடி நடிகருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த பஞ்சத்தை தீர்க்கும் வகையில் ரெடின் கிங்ஸ்லி தற்போது பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்றும் கூறப்படுகிறது. 46 வயதான ரெடின் கிங்ஸ்லி திருமணமே செய்யாமல் இருந்த நிலையில் சங்கீதாவை பார்த்ததும் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மைசூரில் எளிய முறையில் திருமணம் முடித்துக் கொண்டார். அதன் பின்னர் ஹனிமூன், திருமண வரவேற்பு ஆகிய புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.



இந்த நிலையில் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா சமீபத்தில் பேட்டி அளித்த போது ’திருமணத்திற்கு முன்பே நான் என்னுடைய சில ரகசியங்களை அவரிடம் கூறிவிட்டேன், குறிப்பாக எனக்கு சமையல் தெரியாது, வீட்டை ஒழுங்காக நிர்வாகம் செய்ய தெரியாது என்று கூறிவிட்டேன், அதற்கு அவர், பரவாயில்லை அதற்கெல்லாம் ஆள் வைத்துக் கொள்ளலாம், நாம் ஜாலியாக சேர்ந்து ஊர் சுற்றலாம்’ என்று சொன்னார்.

அதேபோல் நான் என்ன சொன்னாலும் அதற்கு எனது கணவர் மறுப்பு தெரிவிக்க மாட்டார். குறிப்பாக நண்பர்களுடன் வெளியில் செல்ல வேண்டும் என்றால் கூட அவர் ஓகே என்று தான் சொல்வார்’ என்று அந்த பேட்டியில் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement