• Dec 26 2024

அடுத்தடுத்து தள்ளிப் போகும் ரிலீஸ் படங்கள்! பின்னணி என்ன தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களின் வாக்குகள் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தலின் அட்டவணை மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக எதிர்வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறும் என கூறப்பட்டது.


இந்த தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த முன்னணி படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காத்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தக்லான் படம் மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்த தனுஷின் ராயன்  படமும் தள்ளிப் போய் உள்ளது. இந்தியன் 2 படமும் ஏப்ரல் 19ஆம் தேதி அடுத்து தன்னுடைய ரிலீஸ் தேதி அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல கமல் - பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 D  படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது. அரண்மனை நான்காம் பாகமும் ஏப்ரல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

அத்துடன் ஸ்டார் படமும், பாலாவின் வணங்கான் படமும் தொடர்பான அப்டேட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement