• Feb 25 2025

பாலியல் வன்கொடுமை புகாரில் இருந்து சீமான் மீளமுடியாது..! நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கை

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் அரசியல் தலைவரான சீமானுக்கு எதிராக வந்த பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமாக உள்ளது. இந்த புகார் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முக்கியமான தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.


நீதிபதி இளந்திரையன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின் தீவிரத்தைக் கவனித்துக் கொண்டே “புகார் தீவிரமானது என்பதால் அந்த புகாரை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது” என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மற்றும் இழப்பு குறித்த மேற்பார்வையை நீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில் சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியபடி அவர் சீமான் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.தற்போது இந்த தீர்மானம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் அடுத்த கட்ட விசாரணைகள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement