• Jan 20 2025

நெஞ்சத்தை கிள்ளாதே புகைப்படங்களை பகிர்ந்து! விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரேஷ்மா!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் ரசிகர்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக இருந்துவந்தது. இந்நிலையில் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் நிறைவடைந்து விட்டது. இந்த சீரியல் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ரேஷ்மா முரளிதரன் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 


நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நடிகர்  ஜெய் ஆகாஷ் காலில் அடிபட்டதன் காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விளக்கினார். அதனால் சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஹீரோ பற்றி யோசித்த நீங்கள் ஹீரோயின் பற்றி யோசிக்கவில்லை என்று இணையத்தில் பெரிய பஞ்சாயத்தே ரசிகர்களிடம் ஓடிக்கொண்டிருக்கிறது. 


இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகை  ரேஷ்மா முரளிதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே ஷூட்டிங் நேரத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் " நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலின் திடீர் முடிவைப் பற்றி சிறிது பேச விரும்புகிறேன். நிகழ்ச்சியை இப்படி முடிப்பது எங்கள் திட்டங்களில் இல்லை, அது ஏற்படுத்திய ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம். நாங்கள் மிகவும் ரசித்த பயணம் அது என்று கூறியுள்ளார்.


மேலும் "துரதிர்ஷ்டவசமாக, எதிர்பாராத சூழ்நிலைகளால், எங்களால் அதை தொடர முடியவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது ஒருவரைப் பற்றியது மட்டுமல்ல அதை நம்பி வாழ்வாதாரம் கொண்ட நூற்றுக்கணக்கான மக்களின் கடின உழைப்பு. எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு யதார்த்தத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது" என்று கூறிய இவர் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.


அதாவது "எனது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எதிர்மறையோ, பழியையோ பரப்புவதற்குப் பதிலாக நெஞ்சத்தைக் கிள்ளாதே தந்த அழகிய தருணங்களைப் பாராட்டுவோம். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு உலகத்தையே குறிக்கும், மேலும் உற்சாகமான திட்டங்களை விரைவில் கொண்டு வருவேன் என்று நம்புகிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement