மெரினா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிவகார்த்திகேயன் அடுத்து 3 படத்தில் காமெடியனாக நடித்தார். அதன்பின், சூரியுடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார். இதன் பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியுடன் மீண்டும் இணைந்தார் பொன்ராம். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் நடித்து அசத்த்தியிருந்தார்.
d_i_a
இந்த நிலையில், பொன்ராம் ”மீண்டும் சிவா, சூரி கூட்டணியில் ஒரு படம் எடுக்கும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான சூழல் அமைந்தால் நிச்சயம் படம் உருவாகும். ஆக்சன் படங்கள் எடுப்பது எளிது. ஆனால், காமெடி படங்கள் எடுப்பது சவாலான விஷயம்” என்று தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து அடுத்து இணையவுள்ள படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2வது பாகமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
Listen News!