• Dec 26 2024

பந்தா காட்டாத POP பாடகி ரிஹானா! இந்தியன் செலிபிரிட்டிஸ் இதை பார்த்து சரி திருந்துங்கப்பா...!!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ஆனந்த் அம்பானியின் திருமண விழா தான்.

ஆனந்த் அம்பானி - ராதிகாவின் திருமணத்திற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போது இருந்தே அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பயங்கரமாகவும் மிகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகின்றது.

மார்ச் முதலாம் திகதியிலிருந்து இன்று வரை மூன்று நாட்களாக ப்ரி வெடிங் பங்க்ஷன் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக உள்ளூர் பிரபலங்களிலிருந்து உலக பிரபலங்கள் வரைக்கும் குஜராத் ஜாம் நகரில் குவிந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் பிரபல டாப் பாடகி ரிஹானா பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிக்  கொண்டுள்ளன.


அதாவது, லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள  ரிஹானா,  இறுதியாக 2016 ஆம் ஆண்டில் தான் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளாராம். 

அதைத்தொடர்ந்து தற்போது அம்பானி வீட்டு பங்க்ஷன் தான் அவர் கலந்து கொண்ட அடுத்த பெரிய நிகழ்ச்சி என்று சொல்லப்படுகிறது.


இதற்காக மட்டும் அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் ஆகவும் கொடுக்கப்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் உள்ளூர் பிரபல நடிகைகளின் சம்பளங்களை விட 20 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. 

ஆனாலும் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் அருகில் பாதுகாப்பிற்கு ஜிம் பாய்ஸ் கூட இல்லாமல் மிகவும் சிம்பிளாக இருக்கும் அவரை தற்போது கொண்டாடி வருகிறார்கள். 


உலக பேமஸ் ஆன ரிஹானா சர்வ சாதாரணமாக ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் தோல் மேல் கை போட்டு போட்டோ எடுத்துக் கொண்டதுடன், அவர்கள் கொடுத்த கிஃப்ட்டையும் அன்பாக வாங்கி கொண்டு உள்ளார். 

இதை வேளை அம்பானியின் மனைவி உள்ளூர் ஆட்களின் கைகளை தட்டிவிட்ட வீடியோ ஒன்று அண்மையில் வைரலாகி பேசு பொருளானதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement