பிரபல நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45- வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இப்படத்தின் சூப்பரான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா-45 திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திர்ஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யா வக்கீலாக நடிக்கிறார். வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் தொடர்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா 45 திரைப்படத்தின் ஷூட்டிங் கோயம்புத்தாரில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு பேட்டைக்காரன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீசாக இருக்கிறது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!