• Oct 05 2025

சுடச்சுட இட்லி, சாம்பார், சட்னி ஃப்ரீ.. ஃப்ரீ..! கூவிக் கூவி அழைக்கப்படும் ரசிகர்கள்

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படம் தனுஷ் இயக்கி நடிக்கும் நான்காவது படமாகும். இட்லி கடை படத்தின் கதை கிராமத்து  கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

நடிகர் தனுஷ்  நடிப்பை தாண்டியும் அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வருகின்றார். ஏற்கனவே பவர் பாண்டி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன் மற்றும் இட்லி கடை என நான்கு படங்களை இதுவரை இயக்கியுள்ளார். 

தனுஷ் இறுதியாக நடித்த ராயன் திரைப்படம்  100 கோடி ரூபாய் வசூலில் சாதனை படைத்தது.  இதைத் தொடர்ந்து நாளைய தினம் தனுஷின் இட்லி கடை படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் Wunderbar பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. . இப்படத்தில் நித்தியா மேனன் , அசோக் செல்வன், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே, அருண் விஜய், ராஜ்கிரண், ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில்,  நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இட்லி, சாம்பார், சட்னி என  சுடச்சுட  விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இந்த படத்திற்கு  பாசிட்டிவான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement