• Apr 18 2026

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ரோபோ ஷங்கரை வண்டியில் தள்ளிச் செல்லும் அவரது மனைவி! திடீரென என்னாச்சு?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ரோபோ ஷங்கர் இந்திய நகைச்சுவை நடிகர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார் . தமிழ் திரையுலகில் பணி புரியும் இவர் கலக்க போவது யாரு என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார் .நகைச்சுவை பாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர் .

இவர் தன்னுடையை தனித்துவமான காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்துவார்.


விஜய் டிவியில் இவருடைய காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானார்.தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார்.

கடந்த ஆண்டு ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென்று உடல் எடை குறைந்து பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். 


எனினும், அதிலிருந்து இப்போது மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில்,  ரோபோ சங்கரை அவரது மனைவி வண்டியில் வைத்து தள்ளி கொண்டு வரும் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில், ரோபோ சங்கர் சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் லக்கேஜ் வைத்து தள்ளி கொண்டு வரும் வண்டி ஒன்றில் அமர்ந்து கொண்டு இருக்க,  தன்னுடைய மனைவி தன்னை தள்ளி வர கலக்கலாக ஒரு டப்ஸ்மாஷ் பண்ணி இருக்கிறார்.

ஆனாலும், இதை பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு என பதறி போய் விட்டனர்.



Advertisement

Advertisement