• Apr 24 2026

பையனுக்காக கெஞ்சும் ரோகிணி.. அண்ணாமலை சொன்ன இறுதி முடிவு.! குஷியில் முத்து, மீனா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்த அண்ணாமலை ஒரு முக்கிய விடயத்தை தெரிவிக்கிறார். அதன்படி, ரோகிணி இல்லாத காரணத்தால், அந்த அறையை முத்து–மீனாவுக்கு வழங்கவும், மனோஜ் ஹாலில் தூங்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கு மனோஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்து, 'என்னால் ஹாலில் தூங்க முடியாது, எனக்கு ரூம் வேண்டும்' எனக் கூறுகிறார். விஜயாவும் மனோஜ்க்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால், இது தான் தனது இறுதி முடிவு என அண்ணாமலை உறுதியாக கூறுகிறார். ஆனாலும் அதற்கு பதிலளித்த மனோஜ், அவர்களுக்கு வேண்டுமான நேரத்தில் ரூமையை பயன்படுத்திக்கொள்ளட்டும் என அசிங்கமாக பேசுகிறார்.

அதைக் கேட்டு அண்ணாமலை திட்டுகிறார். அந்த நேரத்தில்  ரவி தனது அறையை கொடுப்பதாக கூறுகிறார். ஆனாலும், மனோஜ்க்கு தான் ரூமை கொடுக்க வேண்டும் என்றும், ஸ்ருதி எப்போதும் வீட்டிற்கு திரும்பி வருவாள் என்றும் அண்ணாமலை கூறுகிறார். இதனால் மனோஜ் வேறு வழியின்றி சம்மதித்து, முத்து–மீனா சந்தோஷமாக இருப்பதை பார்த்துக்கொண்டே அங்கிருந்து செல்கிறார்.


இதன் பின்னர், ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு ரோகிணி வருகிறார். அங்கு மீனாவிடம், க்ரிஷ்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவன் உங்களுடைய பெயரும் முத்துவின் பெயரும் சொல்லி புலம்பிக்கொண்டிருக்கிறான் என்றும் கூறி, ஒருமுறை வந்து அவனை பார்த்து செல்லுமாறும் ரோகிணி சொல்லிச் செல்கிறார்.

மற்றொரு பக்கம், மனோஜ்க்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயா, சிந்தாமணியுடன் பேசுகிறார். அதற்கு சிந்தாமணி, முதலில் முத்து–மீனாவை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவர்கள் இருப்பதால் பெண் வீட்டில் விசாரித்தால் உங்களுக்கு தான் கெட்ட பெயர் வரும் என்றும் விஜயாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார்.

அந்த நேரத்தில், விஜயா 'உங்களுக்கும் ஒரு பெண் இருக்கிறதே, நாம் சம்பந்தி ஆகலாமா? என்று கேட்க, சிந்தாமணி, தனது மகள் வெளிநாட்டில் படித்தவள் , உங்க மகனுக்காக இவ்வளவு யோசிக்கும்போது, நான் என் மகளுக்காக எவ்வளவு யோசிப்பேன் என்றும் கூறி விஜயாவின் மூக்கை உடைக்கிறார்.

 மேலும், 'உன்னை கூடிய சீக்கிரம் நடுத்தெருவில் நிறுத்தப் போகிறேன், இதில் சம்பந்தியாக ஆகப் போகிறாயா?' என்று மனதிற்குள் திட்டிக்கொள்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement