• Dec 26 2024

தனது வாயை கொடுத்து சிக்கிய ரோகிணி.. ஸ்ருதிக்கு வில்லியான விஜயா? மீனா எடுத்த முடிவு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து கார் வாங்குவதற்காக இரண்டு கார்களை பார்த்து ஓகே பண்ணுகிறார். ஆனாலும் எதை வாங்குவது என்ற குழப்பம் அடைய மீனாவுக்கு போன் போட்டு கார் ஷோ ரூம்க்கு வருமாறு அழைக்கின்றார்.

மறுபக்கம் விஜயா கோபமாக பார்வதி வீட்டுக்கு செல்கின்றார். அங்கு ஸ்ருதியை பணக்கார பைத்தியம் என்று வீட்டில் மீனாவிடம்  மன்னிப்பு கேட்க சொன்ன விடயத்தையும், தனது நகைகளை கொடுத்திருக்கலாம் என்று சொன்ன விஷயத்தை சொல்லி புலம்புகின்றார். மேலும் வீட்டில் பிரச்சனை எல்லாம் முடியட்டும் ஸ்ருதியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கின்றேன் என ஸ்ருதிக்கும் வில்லியாக மாறுகின்றார்.

அதன் பிறகு கார் ஷோரூம்க்கு வந்த மீனா, காரை பார்த்துவிட்டு இப்போ கார் வேண்டுமா? அத்தையும் மாமாவும் பேசாம இருக்காங்க. இந்த நேரத்துல கார் வாங்கிட்டு போனா யாரும் சந்தோஷப்பட மாட்டாங்க. முதல்ல அவங்கள பேச வைப்போம் என்று சொல்லுகிறார். அதற்கு முத்து இதுக்கு ஒரே ஒரு வழி தான்.. வீட்டுக்கு போ நான் வாரேன்னு சொல்லுகிறார்.


இதைத் தொடர்ந்து பிரசவ வலியால் துடிப்பது போல ஸ்ருதி டப்பிங் பேச இறுதியில் ஃபீல் பண்ணி எமோஷனல் ஆகி சுதாவுக்கு போன் போட்டு என்னை பெற்றதற்கு ரொம்ப கஷ்டப்பட்டீங்களா என்று சாரி சொல்லுகிறார். 

அதன் பின்பு ஸ்ருதி அதே பீலிங்குடன் வீட்டுக்கு வர, மீனா ஸ்ருதிக்கும் ரோகிணிக்கும் டீ போட்டு கொடுக்கிறார். அப்போது ஏன் டல்லா இருக்கீங்க என ஸ்ருதியிடம் கேட்க, பிரசவ வலியால் துடிப்பது போல டப்பிங் பேசிய விஷயத்தை சொல்லுகின்றார்.

இதன் போது ரோகிணி ஆமா குழந்தை பெற்றுக்கொள்வது அவ்வளவு ஈஸி கிடையாது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக வலி இருக்கும் என என்று முதல் மாதத்தில் இருந்து பத்து மாசம் வரை நடப்பது இது தான் என அப்படியே தன்னை மறந்து அனுபவத்தை சொல்லுகிறார். இதைக் கேட்ட மீனாவும் ஸ்ருதியும்  சந்தேக பார்வை பார்க்க ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement