• Oct 26 2024

சினிமாட்டிக் யுனிவர்ஸ் படத்தில் அஜித்? ‘கேஜிஎப்’ இயக்குனருடன் மூன்று படங்கள் டீல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படம் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ஒரே இயக்குனர் படத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

அஜித்தின் அடுத்த படத்தை ‘கேஜிஎப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ‘கேஜிஎப்’ படத்தின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் மூன்று படங்களை தொடர்ச்சியாக பிரசாந்த் நீல் இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் இவற்றில் ஒரு படம் ‘கேஜிஎப்’ படத்துடன் கனெக்சன் ஆகும் வகையில் இருக்கும் என்றும் மற்ற இரண்டு படங்கள் தனிக்கதை அம்சத்துடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம் டிராப்பான போது பிரசாந்த் நீல் தான் தனது அடுத்த படத்தின் இயக்குனர் என்று அஜித் முடிவு செய்தார், ஆனால் அப்போது அவர் வேறு ஒரு படத்தில் பிசியாக இருந்ததால்தான் அஜித் படத்தை இயக்க முடியவில்லை.  இந்த நிலையில் தற்போது அஜித், பிரசாந்த் நீல் ஆகிய இருவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்களில் அஜித் நடித்த நிலையில் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதை அடுத்து அஜித் ஒரு பான் இந்திய நடிகராக உருவாகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement