• May 28 2026

க்ரிஷை வைத்து மனோஜை அசிங்கப்படுத்திய ரோகிணி.! அம்பலமான சிந்தாமணியின் பிளான்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ரவியும் ஸ்ருதியும் விஜயாவிடம் வந்து நீத்து பூக்கடை ஆரம்பித்த விஷயத்தையும், அதற்கு சிந்தாமணி தான் சப்ளை செய்கிறார் என்பதையும் கூறி, சிந்தாமணியிடம் சொல்லி அதை தடுக்குமாறு கூறுகின்றனர்.

அதன்படி, விஜயாவும் பார்வதி வீட்டிற்கு சென்று அங்கு சிந்தாமணியிடம் “ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு சிந்தாமணி, “இது எல்லாம் உங்களுடைய நன்மைக்காக தான். நீத்து என்ன செய்வார் என்று தெரியாது. அதனால் நான் அவருடன் இருந்தால், அவருடைய திட்டங்களை அறிந்து அதை தடுக்க முடியும்” என்று கூறுகிறார். இதை விஜயாவும் நம்புகிறார்.

இன்னொரு பக்கம், மனோஜின் ஸ்டோர் ரூமிற்கு கிரிஷ் வந்து தனது ஸ்கூல் ரிப்போர்ட்டை காட்டி அதில் கையெழுத்து போடச் சொல்கிறார். மேலும் அதில் அப்பாதான் கையெழுத்து போட வேண்டும் என்று கூற, மனோஜ் அவரை திட்டி தள்ளிவிடுகிறார்.


இதனை அங்கு இருந்த கஸ்டமர்கள் பார்த்து விடுகின்றனர். மேலும், ரோகிணியும் வந்து அழுது புலம்பி நாடகம் ஆடுகிறார். இதனால் மனோஜை அனைவரும் தவறாக நினைத்து, வாங்கிய பொருட்களை விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

பின்னர் வீட்டிற்கு வந்த ரவியும் ஸ்ருதியும் விஜயாவிடம் கேட்டபோது, சிந்தாமணியின் திட்டத்தையும் கூறுகிறார். அந்த நேரத்தில் மனோஜ் சோகமாக வந்து நடந்ததை கூறுகிறார். இதுவே இன்றைய எபிசோடு.

Advertisement

Advertisement