• Dec 25 2024

கட்டு கட்டா காசை பார்த்த ரோகிணி.. மீனாவுக்கு விஜயா கொடுத்த வார்னிங்க்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டுக்கு வந்த விஜயா மீனா இனி இங்க இருக்கட்டும் ஆனா அவங்களுடைய குடும்பம் இங்க வரக்கூடாது என சொல்லுகின்றார். ஆனாலும் ஒரு விசேஷம் என்ற அம்மா, தங்கச்சி வரக்கூடாது என்றால் எப்படி அத்தை என மீனா கேட்கிறார்.

ஆனாலும் அது எல்லாம் எனக்கு தெரியாது அவங்க வரக்கூடாது அப்படி வந்தா வாசலோட நிற்கட்டும் என்று சொல்லுகின்றார். அதன் பின்பு அண்ணாமலையிடம் நீங்கள் என்ன விவாகரத்து செய்யப் போறீங்களா? அம்மா வீட்டுக்கு போக போறேன் என்று சொன்னீங்கலாம் அப்படி செய்வீர்களா என்று கேட்கின்றார்.

d_i_a

இதை கேட்டதும் அண்ணாமலை முத்துவை பார்க்கின்றார். அதன் பின்பு எல்லாரும் ஒரு வழியாக சமாதானமாகி விடுகின்றார்கள். ஆனால் ரோகினி ரூமுக்கு போய் அத்தை எப்படி வந்து இருப்பார் என மண்டையை போட்டு குழப்புகின்றார். இதனை பார்வதியிடம் கேட்க வேண்டும் என்று அங்கு கிளம்பி செல்கின்றார்.


அங்கு பார்வதிக்கு மசாஜ் பண்ணி நைசாக கதையைக் கேட்க, அவரும் வக்கீல் ரெண்டு லட்சம் ரூபா  கொடுத்து தான் கேசை வாபஸ் வாங்கியதாக உண்மையை போட்டு உடைக்கின்றார். அத்துடன் ரோகிணியை கூட்டிக்கொண்டு காசையும் எடுத்துக்காட்டுகின்றார் பார்வதி.

இதைத்தொடர்ந்து இறுதியாக மீனா திருமண மண்டபங்களுக்கு பூ அலங்காரம் செய்யும் விதத்தை சின்ன மாடலாக செய்து அசத்தியுள்ளார். இதை பார்த்து முத்துவம் ஸ்ருதியும் பாராட்டுகின்றார்கள். மேலும் இதனை வெளியில் மார்க்கெட் பண்ண வேண்டும் என்று ஐடியா கொடுக்கின்றார் ஸ்ருதி. இதான் இன்றைய எபிசோட்..


Advertisement

Advertisement