• Jan 13 2025

வாய் மூடி பேசிய ரோகிணி.. முத்துவுக்கு எழுந்த சந்தேகம்.? மீனா சொன்ன பிளாஷ்பேக்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா மலேசியாவில் இருந்து வந்த தம்பதிகளுக்கு விருந்து கொடுக்க விதம் விதமாக சமைத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ருதியும் அவருடன் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார். இதன்போது உங்களால் எப்படி இவ்வளவு வேலை செய்ய முடியுது என்று ஸ்ருதி கேட்க, எங்களை போன்றவர்கள் காலை முதல் இரவு வரை உழைத்தே பழக்கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்.

அதற்குச் ஸ்ருதி, இப்போ வீட்டில் ஒரு சேவண்ட் வைத்திருக்கலாம் தானே என்று சொல்ல, தான் இந்த வீட்டிற்கு வர முதல் ஒரு சேவண்ட் இருந்ததாகவும் நான் வந்த பிறகு அவங்களை அத்தை நிப்பாட்டி விட்டதாகவும் சொல்லுகின்றார். மேலும் நான்தான் அத்தைக்கு சம்பளம் வாங்காத வேலைக்காரி என்று மீனா சொல்லுகின்றார். 

அதன் பின்பு அங்கு வந்த விஜயா யாரைக் கேட்டு இவ்வளவு  சமையல் செய்கிறாய்? இது என்ன வீடா? ஹோட்டலா? என்று கேட்கின்றார். அதற்கு முத்து வந்ததும் கேட்டு சொல்லுகின்றேன் என்று டயலாக் விடுகின்றார் மீனா. இதன் போது அண்ணாமலை தன்னிடம் முத்து போன் பண்ணி சொல்லியதாக விஜயாவுக்கு சொல்லுகிறார் .


இதை தொடர்ந்து முத்து மலேசியா தம்பதியினரை வீட்டிற்கு அழைத்து வருகின்றார். அவர்களை அண்ணாமலை வரவேற்கின்றார். ஆனாலும் விஜயாவுக்கு பிடிக்காதது போல நடந்து கொள்கின்றார். 

அதன் பின்பு அவர்கள் மலேசியாவில் இருந்து வந்து இருக்கின்றார்கள் என்பதை அறிந்ததும் எனது மூத்த மருமகளும் மலேசியா தான். அவர் ரொம்ப பெரிய கோடீஸ்வரி என்று துள்ளிக்குதித்து ரோகிணியை அழைக்கின்றார்.

ஆனால் ரோகினி வெளியே போனா மாட்டிக்கொள்ளுவோம்.. வாய் திறக்கவே கூடாது என்று வாயில் பஞ்சை வைத்து வெளியே வருகின்றார். அவர் வந்ததும் தனக்கு சரியான பல்லு வலி என்று ஆக்சன் போட்டு காட்டி டாக்டரிடம் செல்ல முற்படுகின்றார்.

இதன்போது நானும் கூட வருகின்றேன் என்று ரோகிணியுடன் ஸ்ருதி செல்லுகின்றார். இதை பார்த்து முத்து சந்தேகப்படுகிறார்.  இதுதான் இன்றைய எபிசோட்..

Advertisement

Advertisement