• Dec 25 2024

முத்துவின் போனை திருடிய ரோகிணி.. பல்பு வாங்கிய மனோஜ்? கடும் கோபத்தில் ஸ்ருதியின் அம்மா

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகினி விடிந்ததும் முத்துவின் ஃபோனில் இருந்து சத்யாவின் வீடியோவை எடுப்பதற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றார். அதன்படி முத்து காலையில் எழுந்து போனில் சார்ஜ் இல்லை என்று ரூமுக்குச் சென்று சார்ஜ் போட்டுவிட்டு குளிக்க செல்கின்றார்.

அந்த நேரத்தில் அங்கு ஓடிச்சென்ற ரோகினி போனை எடுத்து கட்டிலுக்கு அடியில் படுத்து விடுகின்றார். அதன் பின்பு முத்து மீனாவை அழைத்து சாப்பாடு ஊட்டி விடுமாறும், தலை துடைத்து  விடுமாறும் சொல்ல, அவர்கள் ரூமிலேயே இருக்கின்றார்கள். இதனால் ரூமை விட்டு வெளியே வர முடியாமல் ரோகினி நிற்கின்றார். சத்யாவின் வீடியோவை பார்த்து மகிழ்கின்றார்.

மறுபக்கம் மனோஜ் ரோகிணியை காணவில்லை என வீடு முழுக்க தேடுகின்றார். அத்துடன் விஜயாவிடம் தனக்கு 500 ரூபாய் தருமாறு கேட்க, தன்னிடம் காசு இல்லை என்று சொல்லுகின்றார். அதன் பின்பு அண்ணாமலை இடமும் கேட்க, தன்னிடம் 300 ரூபாய் இருக்கிறது என்று சொல்லுகின்றார். ஆனால் முதலில் அந்த 500 கொடு என கேட்க, தன்னிடம் காசு இல்லை என்று சொல்லுகின்றார் மனோஜ். இதனால் அண்ணாமலையும் தன்னிடம் காசு இல்லை என்று சொல்லுகின்றா. அதற்கு மனோஜ் நீங்க முத்து கேட்டா தானே உடனே கொடுப்பீங்க என்று சொல்ல, அவன் காசு கேட்கவே மாட்டான் என்று சொல்லிச் செல்கின்றார் அண்ணாமலை.


அதன் பின்பு முத்து போனை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்க, ரோகிணி அந்த கேப்புக்குள் போனை டேபிளில் வைத்து விட்டு மொட்டை மாடிக்கு சென்று மேல் இருந்து வருகின்றார். 

இன்னொரு பக்கம் ரவி நீத்துவுடன் ஷாப்பிங் பண்ணுவதற்காக செல்கின்றார். அங்கு அவர்கள் ஹோட்டலுக்கு தேவையான பிளேட்களை வாங்கிக் கொண்டிருக்க, அங்கு வந்த ஸ்ருதியின் அம்மா அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபப்படுகிறார். அதன் பின்பு ரவி சுதாவை பார்த்ததும் இதுதான் என் மாமி என்று அறிமுகப்படுத்தி வைக்கின்றார். அவர்கள் போன பின்பு சுதா ஸ்ருதிக்கு கால் பண்ணுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement