• May 04 2025

விஜயாவின் முடிவால் தலைகீழான வாழ்க்கை..!புதிய பிளான் பண்ணும் ரோகிணி..கன்பியூசில் முத்து!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி தன்ன வித்தியா புது வீடு பாக்க கூப்பிடல என்று கோபப்படுறார். அதுக்கு வித்தியா இங்க பாரு நீ என்னோட பிரெண்ட் ஆனா மீனா என்ர லவ் குரு என்று சொல்லுறார். மேலும் நீ என்னோட வீட்டுப் பொண்ணு மாதிரி உன்ன எப்ப வேணும் என்றாலும் கூட்டிக்கொண்டு போகலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி சும்மா சமாளிக்காத என்கிறார்.

இதனை அடுத்து விஜயா மனோஜ தன்னட்ட இருந்து பிரிச்சு வேற கலியாணம் பண்ணி வைக்கப் போறா என்ற விஷயத்த வித்தியா கிட்ட ரோகிணி சொல்லுறார். அதைக் கேட்ட வித்தியா அப்ப மனோஜுக்கும் ரெண்டு கலியாணமா என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து முத்து தன்ர பிரெண்ட்ஸோட சந்தோசமா கதைச்சுக் கொண்டிருக்கார்.


அதனை அடுத்து விஜயாவும் பார்வதியும் பூசாரி கிட்ட போய் நிற்கினம். அங்க போன விஜயா தன்ர பிள்ளை அந்தப் பொண்ணு கூட சேர்ந்து வாழ கூடாது அதுக்கு ஏதாவது செய்யுங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட பூசாரி எதுக்குப் பிரிக்கோணும் என்று கேக்கிறார். பின் விஜயா அவள் எங்கள ஏமாத்திட்டா அவள பிரிக்கோணும் அவளா தான் என்று சொல்லுறார்.

இதனை அடுத்து பூசாரி கிட்ட இருந்து ஒரு தாயத்துக் கயிறை வாங்கிக் கொண்டு போறார். பின் விஜயா பார்வதி கிட்ட இதே மாதிரி மீனாவயும் முத்துவயும் பிரிக்கோணும் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து அதே பூசாரி கிட்ட  ரோகிணி வந்து தன்ன மாமியார் வாழ விடுறா இல்ல என்று சொல்லி அதுக்கு ஒரு கயிறை வாங்கிக் கொண்டு போறார். பின் விஜயா வாங்கின தாயத்துக் கயிறை முத்து பாக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement