• Oct 30 2024

ரோகிணி போட்ட மாஸ்டர் பிளானால் போலீஸ் ஸ்டேஷன் ஏறிய முத்து! PA க்கு கல்யாண விருந்து

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான்  சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட் இல், தனது போனை காணவில்லை என முத்து பரபரப்பாக தேடிக்  கொண்டு இருக்கிறார்.  மீனாவும் முத்துவும் பதற்றத்துடன் போனை தேடிக் கொண்டிருப்பதை ரோகிணி பார்த்து ரசிக்கின்றார்.

அதன்பின்பு முத்து செல்வத்துக்கு போன் பண்ணி தனது போனை காணவில்லை என்று சொல்லுகின்றார். மேலும் அதில் தான் சேவ் பண்ணி வைத்திருக்கின்றேன் என்று சொல்லும் போது, மீனா என்ன என்று கேட்கின்றார். அதற்கு நம்பர் சேவ் பண்ணி வைத்திருக்கின்றேன் என்று சமாளித்து விட்டு செல்கிறார்.

இதை தொடர்ந்து செல்வம், முத்து உடன் இணைந்து பார்ட்டி நடந்த ஹோட்டலுக்கு சென்று போனை தேடுகின்றார்கள். ஆனாலும் போன் கிடைக்கவில்லை. அதன் பின்பு போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அங்கு கம்பிளைன்ட் கொடுக்கின்றார்கள்.

d_i_a

இன்னொரு பக்கம் மனோஜ் ரோகிணியை கடைக்கு போகுமாறு சொல்ல, தனக்கு இன்றைக்கு ஒரு முக்கியமான கிளைம் மீட்டிங் இருக்குது அதனால் போக முடியாது என்று மறுக்கின்றார். அதன் பின்பு சிட்டியை பார்ப்பதற்காக செல்கின்றார்.


அங்கு தனக்கு வீடியோ கிடைத்துவிட்டது ஆனால் முதலில் பிஏ வை ஒரு வழி பண்ணுமாறு சொல்ல, சிட்டி அவரை தனது ஆட்களை வைத்து தூக்கி வருகின்றார். அங்கு பிஏ வை கண்ணை கட்டி கூட்டி வந்து இருட்டு ரூமுக்குள் வைத்து அடித்து துவைக்க பிளான் பண்ணுகின்றார் சிட்டி.

இதை பார்த்த சந்தோஷப்பட்ட ரோகினி சத்யாவின் வீடியோவை சிட்டிக்கு அனுப்புகின்றார். மேலும் இனி என் வழியில் பிஏ வரக்கூடாது என்று சிட்டிக்கு சொல்லி செல்கின்றார்.

Advertisement