• Dec 26 2024

தீபாவளி ரேஸில் முந்தியடித்த அமரன்..! பிரதர் & ப்ளடி பெக்கர் டிக்கெட் புக்கிங் நிலவரம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களை டார்கெட் பண்ணி பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும்.. அதேபோல தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று பிரபல ஹீரோக்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்த்திரையில் தற்போது ஸ்டாராக விளங்கும் கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவ பாலன் முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இதனை நெல்சன் திலிக்குமார் முதன்முறையாக தயாரித்துள்ளார். இதில் யாசகராக கவின் நடித்து அசத்தியுள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான ப்ரீ டிக்கெட் புக்கிங் முன்பதிவு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில திரையரங்குகளில் இந்த படத்திற்கு 9:00 மணி காட்சி முதல் காட்சியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில திரையரங்குகளில் இந்த படத்திற்கு ஹவுஸ் ஃபுல் ஆனபோதிலும் ஒரு சில தியேட்டர்களில் இன்னும் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருக்கின்றன. எனினும் நாளடைவில் இதன் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

d_i_a

இதைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹிரோவாக நடிக்கும் படம் தான் பிரதர். இந்த படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளார்கள். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த கதை ரசிகர்களை சிரிக்க  வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த படம் அமரன், பிளடி பெக்கர் படத்துடன் ஒப்பிடும்போது குறைவான தியேட்டர்களிலேயே இடம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.சில தியேட்டர்களில் பிரதர் படத்திற்கு டிக்கெட் பெரும்பாலும் விற்கப்பட்டுவிட்ட நிலையில் ஒரு சில தியேட்டர்களில் ப்ரீ புக்கிங் செய்யப்படாமல் இருக்கின்றன.

தீபாவளி விருந்தாக எதிர்பார்க்கப்படும் படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவியும் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு மேஜர் முகுந்த் வரதராஜ் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான பிரீ புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களிலேயே ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன. ஆனாலும் இன்னும் ஒரு சில டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருக்கின்றதாம்.

இதேவேளை சிங்கப்பூரில் மூன்று படங்களின் டிக்கெட் விற்பனை குறித்த தகவலின் படி அமரன் 11 .8 லட்சம் அளவிற்கு டிக்கெட் ஃப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது . ப்ளடி பெக்கர் படம், ரூ.56,400 வரையும், பிரதர் படம் சுமார் ரூ.29,445 வரையும் ப்ரீ புக்கிங் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement