• Dec 27 2024

போனதெல்லாம் போகட்டும்.. இனி எதிர்காலத்தை கவனிப்போம்.. ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா விவாகரத்தா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


சன் டிவியில் ஒளிபரப்பானரோஜாஎன்ற சீரியலில் நாயகி ஆக நடித்த பிரியங்கா நல்காரி என்பவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த சிலர் அவருக்கும் அவரது கணவருக்கும் பிரச்சினை என்றும் அதனால் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக வதந்தியை கிளப்பி விட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை பிரியங்கா நல்கரிரோஜாசீரியல் மூலம் பிரபலமானார் என்பதும் அதன் பின்னர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும்நளதமயந்திஎன்ற  சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரியங்காவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்த நிலையில் அவர் தனது கணவரை பிரிய போவதாகவும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அதற்கு பிரியங்கா நல்கார் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வீடியோவில் அவர்  ஒரு கதை சொல்லி உள்ளார். ஒருவர் தனது விரல் துண்டாகி விட்டதாக வருத்தப்பட்டதாகவும் அதற்கு இன்னொருவர் கைகால் இல்லாமல் எத்தனையோ பேர் நம்பிக்கை உடன் வாழ்ந்து வருகிறார்கள், உனக்கு ஒரு விரல் தானே போய்விட்டது, அதனால் இருக்கிற ஒன்பது விரலை வைத்து நம்பிக்கை உடன் வாழ வேண்டும், என்று அறிவுரை கூறியதாகவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோவின் கடைசியில் போனதை நினைத்து யாரும் யோசிக்காதீர்கள். இனிமேல் நடக்கப்போவது என்ன? எப்படி எதிர்காலத்தை சமாளிக்க போகிறோம்? என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள போகிறோம்? என்று யோசிக்க வேண்டும்.  போனதைப்பற்றி யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம், அடுத்தது என்ன என்பதை யோசிங்கள் என்று கூறியுள்ளார்.

முக்கியமாக நிகழ்காலத்தை யாரும் மிஸ் செய்து விட வேண்டாம், அது ரொம்ப முக்கியம், எனவே சந்தோஷமாக இருப்பதை நினைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள்என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் பிரியங்காபோனது போகட்டும்என்று கூறியதை அடுத்து அவர் தனது கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் இவ்வாறு விரக்தியுடன் கூறி இருப்பதாகவும் கதை கட்டி விடுகின்றனர்.



Advertisement

Advertisement