• Jan 09 2025

சௌந்தர்யாவை கேவலமாக கலாய்த்த சாச்சனா.. இவ்வளவு வன்மம் தேவையா?

Aathira / 18 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது ட்விஸ்ட்டாக இந்த சீசனில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்ற 8 போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யமானதாக காணப்படுகின்றது.

அதன்படி சுனிதா, வர்ஷினி, ரவீந்தர், ரியா, அர்னவ், தர்ஷா குப்தா, சாச்சனா, ஷிவக்குமார் ஆகியோர் என்ட்ரி  கொடுத்துள்ளார்கள். மேலும் தற்போது உள்ளே நுழைந்த பழைய போட்டியாளர்களுக்கு இருவரை வெளியேற்றுவதற்கான அதிகாரத்தையும் பிக் பாஸ் கொடுத்துள்ளார்.

இதில் வெளியில் என்ன நடக்கின்றது என்பதை சொல்லும் வகையில் தற்போது நுழைந்த போட்டியாளர்கள் காணப்பட்டதோடு அதில் உள்ள ஏழு பேரும் ஹவுஸ்மேட்ஸ் பற்றிய குறைகளை தான் அதிகமாக சொல்லியுள்ளார்கள். ஆனால் ரவீந்தர் தான் அனைத்து போட்டியாளர்கள் பற்றியும் பாசிட்டிவாக தனது கருத்தை சொல்லி இருந்தார்.


இதைத்தொடர்ந்து இன்றைய தினம் பிக்பாஸ் விதிமுறையை மீறியதாக ரவீந்தர் கடுமையாக கண்டிக்கப்பட்டார். அதில் அவர் எமோஷனலாகி அழுத காட்சிகளும் இணையத்தில் வைரலாக இருந்தது.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சௌந்தர்யாவை கேவலமாக கலாய்க்கும் வகையில் சாச்சனா நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில்   தர்ஷா குப்தா பாட்டு பாட, சாச்சனா சௌந்தர்யா போல தலையை விரித்துக்கொண்டு ஆக்சன் போட்டு காட்டியுள்ளார்.


இதை பார்த்த போட்டியாளர்கள் சௌந்தர்யாவை தான் பங்கமாக கலாய்க்கின்றார் என்று தெரிந்து கொண்டாலும் சிரித்து மகிழ்கின்றார்கள். சௌந்தர்யாவுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் முணுமுணுத்துக் கொண்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..,

Advertisement

Advertisement