விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி நடித்திருந்தார். மேலும் இதில் மாளவிகா மோகன் சூனியக்காரி கெட்டப்பில் மிரட்டி இருப்பார்.
இதைத்தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்த நிலையில் இதன் ரிலீஸ் திடீரென தள்ளிப்போனது.
d_i_a
இதனால் வீர தீர சூரன் திரைப்படம் ஜனவரி 30 அல்லது 31 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்க உள்ளார் விக்ரம். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றதாம்.
இந்த நிலையில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள திரைப்படத்திற்கு சாய் பல்லவியை கதாநாயகியாக்க திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் சாய் பல்லவி தனக்கு கால்ஷீட் இல்லை என இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். தற்போது இந்த தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது.
மேலும் இந்த படத்திற்கு கதாநாயகியின் கேரக்டர் வலிமையானதாக காணப்படுவதினாலேயே முதலில் சாய் பல்லவியை அணுகியுள்ளனர்.
ஆனாலும் அவர் மறுத்துள்ள நிலையில் பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீ லீலா உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!