• Dec 25 2024

வணங்கான்,விடாமுயற்சி வெற்றி தான்! பாலா சார் தான் என் நம்பிக்கை! Sivakarthikeyan speech

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன். ஆடியோ லஞ்ச் மேடையில் "அமரன் படத்திற்கு பாலாதான் தைரியம் கொடுத்தார், வணங்கான் படம் Vல ஆரம்பிப்பதால் வெற்றி தான்"  என்று கூறியுள்ளார்.


பாலா25 மற்றும் வணங்கான் ஆடியோ லஞ்ச் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் உட்பட நடிகர் சூர்யா, இயக்குநர் மணிரத்தினம், நடிகர் சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ், நடிகர் சிவகுமார் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். வணங்கான் திரைப்படம் தொடர்பாகவும், இயக்குநர் பாலாவின் 25 வருட திரைப்பயம் தொடர்பாகவும் பலரும் மேடையில் பேசினார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பாலா குறித்து சில விடையங்களை கூறினார். 


மேலும் அவர் பேசுகையில்" தீபாவளியின் போது வெளியாகும் படங்களில் நெகட்டிவ் க்ளைமேக்ஸ் இருந்தால் அந்த படம் ஓடாது என்கிற நம்பிக்கை இருக்கிறது. இதனால் அமரன் பட க்ளைமேக்ஸ் பற்றி நான் நிறைய யோசித்தேன். அப்போது தான் தெரிந்தது பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் நெகட்டிவ் க்ளைமேக்ஸ் இருந்தது. ஆனால் அந்த படம் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அது எனக்கு பெரிய நம்பிக்கையாக இருந்தது. அதன் பின்னரே அமரன் படத்தை வெளியிட்டோம் இன்று அது வெற்றியடைந்துள்ளது " என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறுகையில் அருண் விஜயின் வணங்கான், அஜித் சாரின் விடாமுயற்சி இரண்டும் மோதுகிறது.  இரண்டுமே V என்ற எழுத்தில் தொடங்குவதால் வெற்றியை தான் அடையும் என தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Advertisement

Advertisement