• Dec 26 2024

நடிகர் ராமராஜன் ஒரு புதுமுக நடிகர் தான்.. ‘சாமானியன்’ தயாரிப்பாளரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் ராமராஜன் நடித்த ‘சாமானியன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் ராமராஜன், படத்தின் தயாரிப்பாளர் மீது அதிருப்தி அடைந்து சில குற்றச்சாட்டுகளை கூறினார். குறிப்பாக தயாரிப்பாளர்  ப்ரோமோஷனுக்கு  செலவு செய்யவில்லை என்றும் தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் கூறிய நிலையில் இதற்கு தயாரிப்பாளர் மதியழகன் விளக்கம் அளித்துள்ளார்.

ராமராஜன் ஒரு காலத்தில் பெரிய நடிகராக இருக்கலாம், ஆனால் தற்போது அவர் கமெபேக் வந்துள்ளதால் 2கே கிட்ஸ்களுக்கு அவர் ஒரு அறிமுக நடிகர் போல் தான். ஒரு படம் வெற்றி அடைய வேண்டும் என்றால் கண்டிப்பாக ப்ரமோஷன் செய்ய வேண்டும், நாங்கள்  ப்ரோமோஷனுக்கு  மட்டும் இந்த படத்திற்காக 75 லட்சம் செலவு செய்துள்ளேன், ப்ரோமோஷனுக்கு செலவு செய்யவில்லை என்பது தவறான தகவல் என்று தெரிவித்தார்.

ராமராஜன் மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு, அவருக்கு ஒரு பைசா கூட சம்பள பாக்கி வைக்கவில்லை, முழுவதும் செட்டில் செய்து விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் தற்போதெல்லாம் திரையரங்குகளுக்கு சென்று நடிகர்கள் ப்ரமோஷன் செய்வது வழக்கமாக இருக்கும் நிலையில் ராமராஜன் அவர்களையும் திரையரங்குக்கு வருமாறு நான் கோரிக்கை விடுத்தேன், ஆனால் அவர் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி படம் ரிலீஸ் ஆகி 19வது நாளில் தான் திரையரங்குக்கு அவர் சென்றார்.

’ஜெயிலர்’ போன்ற பெரிய படத்திற்கே 19வது நாளில் கூட்டம் இருக்காது, அதிகபட்சம் இரண்டு வாரம் தான் தமிழ் சினிமாவுக்கு கூட்டம் இருக்கும். அப்படி இருக்கும்போது 19வது நாளில் இவர் திரையரங்குகளுக்கு சென்று எந்த பயனும் இல்லை என்றும் அவர் ராமராஜன் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார். அடுத்தடுத்து ராமராஜன் மற்றும் ‘சாமானியன்’ தயாரிப்பாளர் மதியழகன் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement