• Apr 18 2026

அடடே.. கண்ணுபடப் போகுதப்பா.!! திருமணத்திற்குப் பின் ஜோடியாக திரியும் சமந்தா.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு, மீண்டும் ஒரு முறை சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார். காரணம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியாகி வரும் தகவல்களும், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவும் தான்.


நடிகை சமந்தா சமீபத்தில் தனது காதலர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் ரகசியமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. 

சினிமா நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே பிரம்மாண்டமாக இருக்கின்ற நிலையில், சமந்தா இந்த திருமணத்தை முற்றிலும் வேறுபட்ட முறையில் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் மிகவும் நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


இந்த நிலையில், தற்போது சமந்தா மற்றும் ராஜ் நிடிமோருவும் இருவரும் ஒன்றாக மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) வந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி,வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சமந்தா எளிமையான உடையில் அழகாக காணப்படுகின்றார். அவருடன் ராஜ் நிடிமோருவும் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Advertisement

Advertisement