• Dec 25 2024

ஒரு விளம்பரத்துக்கு இத்தனை கோடி சம்பளமா? தாறுமாறாய் உழைக்கும் நடிகை சமந்தா!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார. சமீபகாலமாக மயோசிடிஸ் நோயால் படங்களில் பெரிதும் நடிக்காமல் இருந்து வந்த சமந்தா, விரைவில் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் இந்தியில் வெளிவந்த தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த வெப் தொடரில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், படங்களில் நடிக்க ரூ. 7 கோடி, வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சமந்தா, விளம்பரங்களில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்று தெரியுமா. நடிகை சமந்தா ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். சமீபத்தில் ஐஸ் க்ரீன் விளம்பரத்தில் கூட சமந்தா நடித்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். 


Advertisement

Advertisement