• Dec 25 2024

நடிகை சமந்தா இப்படி காலை தூக்கி காட்டுகிறாரே? என்ன ஆச்சு அவருக்கு?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா ஆவேசமாக காலை தூக்கி அடிக்கும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது. 

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகினார் என்பதும் அதன் பிறகு பூரண குணமாகி மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் என்பதும் தெரிந்தது. 

இந்த நிலையில் நோயிலிருந்து மீண்டு வந்தவர் போல் தெரியாத வகையில் அவர் கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாகி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி தற்போது அவர் ’சிட்டாடல்’ என்ற பாலிவுட் வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் அந்த தொடரில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் டூப் இல்லாமல் ரிஸ்க் காட்சிகளிலும் அவரே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ’சிட்டாடல்’ தொடருக்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காலை தூக்கி அடிக்கும் வகையிலான உடற்பயிற்சியை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் சமந்தாவால் இவ்வளவு உயரமாக காலை தூக்க முடியுமா? ஒரிஜினல் ஸ்டண்ட் நடிகர்கள் கூட செய்ய  கஷ்டப்படுவதை சமந்தா அசாட்டாக செய்கிறார் என்று கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.



Advertisement

Advertisement