• Dec 26 2024

50 கிலோ சமந்தா, 42 கிலோ எடையை தூக்கிய ஆச்சரியம்.. எப்படி முடிந்தது?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தாவின் உடல் எடை 50 கிலோ என்று கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட அவருடைய உடல் எடையின் எடையை அதாவது 42 கிலோ எடையை தூக்கி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார் என்பதும் அதன் பிறகு சிகிச்சையில் குணமாகி மீண்டும் உடல் நலத்துடன் இருந்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஏற்கனவே ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வரும் சமந்தா விரைவில் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாக போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சமந்தா சமீபத்தில் வெளியிட்ட வொர்க்-அவுட் வீடியோவில் 42 கிலோ எடையை தூக்கியதாக பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில்  ஜிம் பயிற்சியாளர் உதவியுடன் அவர் 42 கிலோ எடையை அசால்டாக தூக்கியதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளனர். சமந்தாவின் எடையே 50 கிலோ என்ற நிலையில் அவர் எப்படி 42 கிலோ எடையை தூக்கும் அளவுக்கு கைகளை பலப்படுத்தினார் என்றும் இடைவிடாத வொர்க்-அவுட் மற்றும் தன்னம்பிக்கை தான் இதற்கு காரணமாக இருக்கும் என்றும் கமெண்ட்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement