பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதும் சர்ச்சைகளுக்கு இடமளிக்கும் ஒரு பிரபலமான ஷோ. குறிப்பாக எலிமினேஷன் பொறுத்து சமூக வலைத்தளங்களில் பெரும் வாக்குவாதம் நடைபெறுவது வழக்கம். சில சமயம் போட்டியாளர்கள் எலிமினேட் ஆகும் விதம் குறித்த சர்ச்சைகள் எழுவது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் பிக் பாஸ் முதல் போட்டியாளரான நடிகை சனம் ஷெட்டி எலிமினேஷன் தொடர்பான பிரச்சினையை தழுவி கருத்து வெளியிட்டுள்ளார். அவர் "பிக் பாஸ் வாக்கெடுக்கு நிலவரம் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அதை பொதுவாக பகிர வேண்டும். இது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்" என கூறியுள்ளார்.
இல்லாவிட்டால் நிகழ்ச்சியை 'private' ஆக்கிவிடுங்கள். அப்போது வாக்கெடுப்பு பற்றிய கேள்விகள் ஏற்படாது ஏனெனில் யாரும் அதை பற்றி கேட்க முடியாது" என அவர் பரிந்துரைத்துள்ளார்.
Listen News!