• Apr 19 2026

சங்கீதா விவாகரத்து வழக்கு; சமாதான பேச்சுவார்த்தை தோல்வி.! விஜய் எடுத்த அதிரடி முடிவு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து அளிக்க இறுதி முடிவு எடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் கடைசி நேரத்தில் சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டும் அது தோல்வியில் முடிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், இருதரப்பும் பரஸ்பர சம்மதத்தோடு பிரிந்துகொள்ள முடியுமா என்று சென்னையில் நேற்று இரு தரப்பு வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 


மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த இரு தரப்புக்கும் நெருக்கமான ஒரு ஜோசியர் முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இதையடுத்து விஜய் விவாகரத்து வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கவே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை நீதிமன்றத்தில் வழக்கு எந்த திசையில் நகரும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement