• Dec 26 2024

குட்டை உடையில் காவாலயா பாட்டுக்கு ஆட்டம் போட்ட சங்கீதா- ரெடின் கிங்ஸ்லி எங்கம்மா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகினார். தொடர்ந்து டாக்டர், நெற்றிக்கண், பீஸ்ட், ஜெயிலர், டிடி ரிட்டன்ஸ், போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் அண்மையில் பிரபல சீரியல் நடிகை சங்கீதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்திருந்தது.இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.


மாஸ்டர், பாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சங்கீதா நடிகர் ரெடின் திருமணம் செய்து கொண்ட நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ் ஆகி வருகிறார். திருமணம் மற்றும் ஹனிமூன் புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர், தற்போது பெண் குழந்தையுடன் ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 அந்த போஸ்ட்டிலேயே தனது அண்ணன் மகளுடன் காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடுறேன் என சங்கீதா தெளிவாக குறிப்பிட்ட நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த குழந்தை உங்களுடைய குழந்தையா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement