• Dec 25 2024

மனைவி ஆல்யா பிறந்தநாளில் சஞ்சீவ் கொடுத்த சூப்பர் கிப்ட்- ரசிகர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.இதையடுத்து, ஆல்யா கர்ப்பமானார். ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

 இருவரும் தங்கள் குழந்தைக்கு அய்லா என்று பெயர் வைத்தனர். திருமணத்துக்கு பிறகு, சஞ்சீவ் கார்த்திக், விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடித்தார். அந்த சீரியல் முடிந்த பிறகு, சன் டிவியில்  கயல் சீரியலில் நடித்து வருகிறார்.ஆல்யாவும் திருமணத்துக்கு பிறகு, விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார்.


இந்நிலையில், ஆல்யா மானசா, மீண்டும் கர்ப்பமடைந்தார். 9 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக  சீரியலில் நடித்து விட்டு பின்னர் பிரேக் எடுத்து சென்று விட்டார்.பின்னர் அர்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்த பின்னர் தற்பெபாழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்னும் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகின்றார்.

இதுதவிர இவர்கள் இருவரும் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என படு பிஸியாக உள்ளனர்.சஞ்சீவ்-ஆல்யா இருவருமே அடிக்கடி ஏதாவது புதிய பொருள் வாங்குவார்கள். சஞ்சீவ் பிறந்தநாளுக்கு காரை பரிசளித்திருந்தார் ஆல்யா மானசா. தற்போது சஞ்சீவ் தனது மனைவி ஆல்யாவிற்காக புதிய மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement