• Jan 06 2025

"மதகஜராஜா" ரிலீஸ்! மீண்டும் திரையில் காமெடியனாக சந்தானம்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகி இன்னும் வெளியாகாத திரைப்படம் "மதகஜராஜா" திரைப்படம். இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் உருவான இந்த படம் பலவருடம் கழித்து இந்த வருடம் ரிலீசாக உள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. அதனை நடிகர் சந்தானம் உறுதிப்படுத்தியுள்ளார். 


சுந்தர் சி, விஷால், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் இன்னும் வெளியிடப்படாத மதகஜராஜா திரைப்படம் 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு ட்ரெய்லரும் வெளியானது ஆனால் இதுவரையில் ரிலீசாகவில்லை. இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் தளத்தில் "மதகஜராஜா" திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து ரிலீஸ் திகதியை பகிர்ந்துள்ளார். 


இந்நிலையில் நடிகர் சந்தானம் மதகஜராஜா திரைப்படம் ஜனவரி 12ம் திகதி ரிலீசாக இருக்கிறது. இந்த பொங்கலை சிரிப்பு திருவிழாவாக கொண்டாட தயாராகுங்கள் என்று கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பலவருடங்கள் இழுப்பில் கிடந்த இந்த திரைப்படம் தற்போது ரிலீஸாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. மேலும் மீண்டும் சந்தானத்தை காமெடியனாக பார்க்க ரசிகர்கள் ஆவளாக இருக்கிறார்கள்.


Advertisement

Advertisement