• Dec 26 2024

நம்ம பட ஹீரோயின் சேலத்து பொண்ணா? நம்ப முடியாமல் ஆச்சரியம் அடைந்த சந்தானம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சந்தானம் நடித்த ’இங்க நான் தான் கிங்கு’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்தவரை பாம்பே பொண்ணு என்று ரொம்ப நேரம் சந்தானம் நினைத்துக் கொண்டு அவரிடம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகுதான் அவர் சேலத்து பொண்ணு என்றும் தமிழ் நன்றாக பேசுவார் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்ததாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

சந்தானம் நடிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகிய ’இங்கு நான் தான் கிங்கு’ என்ற திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 இந்த நிலையில் இந்த படத்தில் நாயகி ஆக நடித்த பிரியா லயா என்பவர் இன்ஸ்டாவில் பிரபலமானவர் என்பது மட்டுமின்றி பரதநாட்டிய டான்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலில் அவரை படப்பிடிப்பில் சந்தித்த சந்தானம், பிரியா லயாவை மும்பை நாயகி என நினைத்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்ததாகவும் நீண்ட நேரம் கழித்து தான் அவருக்கு நம்ம ஹீரோயின் சேலத்து போன்று பொண்ணு என தெரிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதன் பின்னர் அவர் தமிழில் பேசியதாகவும் தெரிவித்தார்.
 
இந்த உரையாடல் குறித்து கூறிய பிரியா லயா, சந்தானத்துடன் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த இந்த நிகழ்வை மறக்க முடியாதது என்றும் அவருடன் ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போது அவருடைய நகைச்சுவையை ரசித்து பார்த்தேன் என்றும் நிச்சயம் அவர் ஒரு சிறந்த மனிதர் என்றும் தெரிவித்துள்ளார்.

சந்தானம், பிரியா லயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலசரவணன், முனிஷ்காந்த், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேசு, கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இங்க நான் தான் கிங்கு’ நாயகி ப்ரியா லயா இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement