• Dec 26 2024

குலதெய்வம் கோவிலில் கும்பாபிஷேகம்.. மனைவி ராதிகாவுடன் சரத்குமார் பங்கேற்பு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமார் தனது மனைவியுடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த சரத்குமார் தற்போதும் பிஸியான நடிகராக உள்ளார் என்பதும் ஆறு படங்களுக்கு மேல் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சினிமா, தொலைக்காட்சி சீரியல் என நடிகை ராதிகாவும் பிசியாக உள்ளார் என்பது தெரிந்தது. 

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிகள் தங்களுடைய குலதெய்வம் கோயிலுக்கு சென்று கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகிகள் தகுந்த மரியாதை அளித்து வரவேற்றனர்

இந்த நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டது குறித்து நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது: 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே என் தந்தை பிறந்த தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நிகழ்வில் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நேற்றும், இன்றும் கலந்து கொண்ட சொந்த பந்தங்களுக்கும், ஆலய பங்காளிகளுக்கும், கிராமத்து பெரியவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் அனைவருடன் மேற்கொண்ட மனநிறைவான குலதெய்வ வழிபாட்டின் பலனாக, ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் அருளாசி மக்கள் அனைவருக்கும் கிடைக்க இந்த இனிய தருணத்தில் பிரார்த்திக்கிறேன்.



Advertisement

Advertisement