• Dec 26 2024

சரத்குமார் முதல் மனைவி செய்த தரமான செய்கை.. இனிமேல் வேற லெவல் தான்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி சிங் ஒரு திரைப்படத்தில் அம்மா வேடத்தில் நடித்து கொண்டிருப்பதாகவும், இந்த படத்தில் தன்னுடைய நடிப்பு வரவேற்கப்பட்டால் தொடர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சரத்குமார் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா தேவி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு வரலட்சுமி உட்பட இரண்டு மகள்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரத்குமார் மற்றும் சாயா தேவி சிங் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  கடந்த 2000ஆம்  ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதனை அடுத்து சரத்குமார் நடிகை ராதிகாவை 2001ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவாகரத்து பெற்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மகள்களுடன் வாழ்ந்து வரும் சாயாதேவி சிங் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படம் தான் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’வணங்கான்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அவர் அருண் விஜய் அம்மாவாக நடித்திருப்பதாகவும் அவரது நடிப்பை பாலாவே பாராட்டியதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படம் வெற்றி பெற்று தனது நடிப்பிற்கும் நல்ல விமர்சனம் கிடைத்தால் தொடர்ந்து அம்மா வேடத்தில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement