• Dec 26 2024

ரஜினியால் தான் ‘ஜக்குபாய்’ படம் ஓடவில்லை.. அதிர்ச்சி தகவல் அளித்த சரத்குமார்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ என்ற திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த நிலையில், இந்த படம் கடந்த 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதும் படு தோல்வி அடைந்ததால் இந்த படத்தை தயாரித்த சரத்குமாரின் மனைவி ராதிகாவின் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜக்குபாய் என்ற கேரக்டரில் சரத்குமார் நடித்திருந்த நிலையில் அவரது மகள் கேரக்டரில் ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார் ‘ஜக்குபாய்’ திரைப்படம் ஏன் ஓடவில்லை என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் நான் நடித்த ’நாட்டாமை’ ’நட்புக்காக’ போன்ற கிராமத்து கதைகள் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் ஒரு கிராமத்துக் கதையில் தான் நான் அவருடைய இயக்கத்தில் நடித்திருக்க வேண்டும், இந்த கதையை தேர்வு செய்தது என்னுடைய தவறுதான் என்று கூறிய அவர், ‘ஜக்குபாய்’ படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண், ‘சிவாஜி’ படத்தில் நடித்து இருந்தார், அதன் பிறகு ‘ஜக்குபாய்’ படத்தில் எனக்கு மகளாக நடித்திருந்தார், ரஜினிக்கு ஜோடியாக பார்த்த ஸ்ரேயாவை, ரசிகர்கள் என்னுடைய மகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனால் தான் இந்த படம் தோல்வி அடைந்தது என்றும் கூறினார்.



இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசிய அவர் ’பிரபல நடிகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள், மக்கள் அதிகம் விரும்பும் நடிகரும் மாறிக்கொண்டே இருப்பார்கள், அதுபோலதான் சூப்பர் ஸ்டார் பட்டமும் மாறிக்கொண்டே இருக்கும், பாக்ஸ் ஆபிஸில் எந்த நடிகர் சாதனை செய்கிறார்களோ, அவர்களை தான் சூப்பர் ஸ்டாராக மக்கள் கொண்டாடுவார்கள்’ என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement