• Dec 27 2024

8 வருஷம் கழிச்சு கர்ப்பமானேன்.. எல்லோரும் ஒரு மாதிரி பேசுனாங்க.. பிரபல சீரியல் நடிகை வருத்தம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

எட்டு வருடம் கழித்து நான் மீண்டும் கர்ப்பமானதை வைத்து பலவிதமான பேசினார்கள் என்றும் ஆனால் அதை எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் பிரபல சீரியல் நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’சத்யா’ என்ற தொடரில் வில்லியாக நடித்து மிரட்டியவர் ஸ்ரீவித்யா. இவரது கணவர் அர்ஜுனன் கார்த்திக் என்பவர் விஜய் நடித்த ’சுறா’ திரைப்படத்தில் உதவி கேமராமானாக பணிபுரிந்தவர் என்பதும் பல படங்களில் பணிபுரிந்த இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீவித்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’எங்கள் ரெண்டு பேருக்குமே பயணம் செய்வதற்கு ரொம்ப பிடிக்கும், நாங்கள் திருமணத்திற்கு முன்பே ஒரு பயணம் போயிட்டு வந்தோம், அது எங்களுக்கு மிகவும் பேவரைட்.

திருமணமான புதிதில் விஜய் டிவியில் ஒரு புதிய தொடருக்கு நான் நடிக்க செலக்ட் ஆயிருந்தேன், ஆனால் அந்த சமயத்தில் நான் கர்ப்பமாக இருந்தேன் என்பதால் குழந்தை பிறந்துவுடன் நான் நடிப்பை தொடரலாம் என்று முடிவு செய்து அந்த தொடரில் நான் கமிட் ஆகவில்லை, இதை நான் விஜய் டிவியிடம் சொன்ன போது அவர்களும் புரிந்து கொண்டார்கள்.
அதன் பிறகு எனக்கு குழந்தை பிறந்தது இப்போ இப்போது நான் குழந்தையுடன் ஜாலியாக இருக்கிறேன்.

 இந்த நிலையில் தான் ஜீ தமிழ் சேனலில் சத்யா தொடரில் நடிக்க ஒப்பந்தமானேன். அந்த சீரியலில் நான் நடிக்க, எனது கணவர் கேமராமேனாக பணிபுரிந்தார். இருவரும் நாங்கள் செட்டில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் மரியாதையுடன் தான் பேசுவோம். அவரை சார் என்று நானும், என்னை அவர் மேடம் என்று தான் கூப்பிடுவார்.

சத்யா சீரியல் கிட்டத்தட்ட முடிவடையும் போது நான் மீண்டும் கர்ப்பமானேன். எட்டு வருடம் கழித்து கர்ப்பம் ஆனதும் பல விதமான விமர்சனங்கள் வந்தது, ஆனால் அதையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, இப்போது எட்டு மாசம் ஆகிறது, நாங்கள் இரண்டு பேரும் புதிய வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’ என்று ஸ்ரீவித்யா அந்த பேட்டியில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement