• Jun 10 2026

குடும்பத்தையே கலங்கவைத்த சத்யாவின் முடிவு.? ரோகிணியின் சந்தோஷத்தை நொறுக்கிய விஜயா

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், "ரேகா இல்லாமல் நான் உயிரோடு இருக்க மாட்டேன்" என்று சத்யா பேசுகிறார். அதற்கு, "அப்படி என்றால் நாங்களும் உயிரோடு இருக்க மாட்டோம்" என்று அவரது அம்மா எமோஷனலாக பேசுகிறார்.

அதன் பிறகு, இந்த விடயம் தொடர்பாக முத்துவை சந்தித்து சத்யா பேசுகிறார். அப்போது, "நீ நேரடியாக சென்று ரேகாவின் அப்பாவிடம் விஷயத்தை சொல்" என்று முத்து தைரியம் கொடுத்து அனுப்புகிறார்.

அதன்படி, சத்யாவும் தயக்கத்துடன் சென்று ரேகாவின் அப்பாவிடம் நடந்தவற்றைக் கூறுகிறார். ஆனால், அவர் எந்தவித பதற்றமும் இல்லாமல், தனக்கு யோசித்து கூற சிறிது நேரம் தருமாறு கேட்கிறார்.

அதன்பின், அங்கு நடந்தவற்றை முத்துவிடம் கூறுகிறார் சத்யா. அதற்கு, "பெண் பிள்ளையை பெற்றவர் யோசிக்கத்தானே வேண்டும்" என்று சத்யாவுக்கு முத்து தைரியம் கொடுக்கிறார்.


இன்னொரு பக்கம், மனோஜ் வரவில்லை என்று ரோகிணி டென்ஷனாக இருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா, மனோஜை தன்னுடன் வருமாறு அழைக்கிறார்.

அதன்படி, மனோஜும் விஜயாவும் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்த ரோகிணி, முதலில் மனோஜைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். ஆனால், அதன்பிறகு வந்த விஜயாவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement