• Apr 04 2025

என்ர பொண்டாட்டியை விட ஜெஃப்ரியைத் தான் கேட்கிறாங்க...!” – சத்யாவின் கலக்கலான பேச்சு..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற போட்டியாளர் சத்யா. இவர் எப்பொழுதும் நேர்மையாகவும், நகைச்சுவை கலந்த அணுகுமுறையாலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர். சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணலில், பிக்பாஸ் வீட்டில் இருந்த பிற போட்டியாளர்களுடனான உறவுகளைப் பற்றிக் கூறியுள்ளார்.


குறிப்பாக, தன்னுடன் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட ஜெஃப்ரி பற்றிப் பேசிய சத்யாவின் ஒரு வரி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் சத்யா கூறியதாவது “என் மனைவியை விட, ஜெஃப்ரியைத் தான் எல்லாரும் கேட்கிறாங்க!” என்ற அவரது கூற்று ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்தவர்கள் சத்யா மற்றும் ஜெஃப்ரி. ஆரம்பத்தில் போட்டி மனப்பான்மையோடு இருந்தாலும், நிகழ்ச்சி நகரும் போதே அவர்களுக்கிடையே ஒரு மனதளவிலான இணைப்பு உருவானது. இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்வது, போட்டிகளில் காமெடி செய்வது போன்றவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.


இதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் சத்யா மற்றும் ஜெஃப்ரி  நல்ல உறவில் உள்ளதாகவே தெரிகின்றது. இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றும் வருகின்றார்கள். இந்த நட்பு ரசிகர்களிடம் வலிமையான உறவை உருவாக்கியுள்ளது. 

நிகழ்ச்சிகளில் உருவாகும் உறவுகள் பல நேரங்களில் நிகழ்ச்சிக்கு மட்டும்தான் உரியதாக காணப்படும். ஆனால் சத்யா மற்றும் ஜெஃப்ரியின் நட்பு அதன் எல்லைகளைத் தாண்டி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றனர்.

Advertisement

Advertisement