• Dec 26 2024

கர்ப்பமா இருக்கும் போதே ரகசிய கல்யாணம்? டாப்சீ கூறிய வில்லத்தனமான காரணம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷின் "ஆடுகளம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய டாப்சீ, காஞ்சனா 2 , ஆனபல் சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தனது நீண்டநாள் காதலனான டென்னிஸ் பிளேயர் "மதாயஸ் போ" என்பவரை கடந்த 23 ஆம் திகதி திருமணம் செய்துள்ளார். மேலும் அவர் கர்ப்பமாக உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இவர்களுடைய திருமணம் சமூக ஊடகங்களுக்கு தெரியாமல் மிகவும் ரகசியமாக செய்யப்பட்டது . இதற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருந்ததுதான் என்று பாலிவுட் ஊடகங்கள் கூறி உள்ளன. 


இதற்கு முன்பே ஓர் பேர்டியில் நடிகை டாப்சீ "எல்லாரும் எனக்கு எப்ப திருமணம் என்று கேட்கிறார்கள் நான் கண்டிப்பாக எனது கர்ப்பத்தை உறுதி செய்த பின்னரே திருமணம் செய்து கொள்வேன்" என்று கூறியிருந்தார்.


இதனாலேயே ஏற்கனவே தனது காதலனுடன் லிவிங் ரிலேஷனில் இருந்த டாப்சீ கர்ப்பமான பின்பே திருமணத்தை செய்துள்ளார். இதனாலேயே மிகவும் ரகசியமாகவும் திருமணம் செய்துள்ளார். இது தற்போது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement