• Dec 26 2024

காரோடு ஜெனியை கடத்திச் சென்ற செழியன்! இனி உங்க பாட்சா பலிக்காது ஜோசப்.?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றை தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

செழியனும் பாக்கியாவும் கோட்ஸ்க்கு செல்ல, அங்கு எழிலும் அவர்களுக்கு சப்போர்ட் ஆக வருகிறார். அப்போது ஜெனியும், அப்பாவும் வர எழில் ஜெனியை மறித்து நலம் விசாரிக்க, ஜெனியின் அப்பா அவர்களுக்கு திட்டிவிட்டு உள்ளே அழைத்துச் செல்கிறார்.


இதன் போது, நீதிபதி முன்னிலையில் ஜெனியும், செழியனும் நிற்க ஜெனியின் வக்கீல் பாக்கியா குடும்பம் அவரை கொடுமை செய்வதாக குற்றம் சாட்டுகிறார்.

செழியனிடம் அவர் பக்க நியாயத்தை கேட்க, ஜெனி மீது ரொம்ப அன்பு இருக்கு, அவளை விட்டு பிரிந்த பின்பு தான் எல்லாம் உணர்ந்தன், என்னை மன்னிச்சிடுங்க என கதறி அழுகிறார்.


இதை தொடர்ந்து வழக்கை தள்ளி வைத்து, அவர்கள் இருவரையும் பேசுமாறும், அவர்கள் எடுக்கும் முடிவு தான் இறுதி எனவும் நீதிபதி சொல்லி அனுப்புகிறார்.

இதையடுத்து, காரில் தனியா இருந்த ஜெனியிடம் பேசுமாறு எழில், செழியனிடம் சொல்ல, எழில் கொடுத்த ஐடியாவின் படியே காரோடு ஜெனியை அழைத்துச் செல்கிறார் செழியன்.


இவ்வாறு நடந்தவற்றை எழில் வந்து பாக்கியாவிடம் சொல்ல, அவர் பதற்றப்படுகிறார்.

அந்த நேரத்தில் ஜெனியின் அப்பாவும் வெளியே வந்து அவர்களை பார்க்கின்றார். இது தான் இன்றைய எபிசோட்.



Advertisement

Advertisement