• Jan 12 2025

செஃப் தாமுவை மீண்டும் அசிங்கப்படுத்தி பேசிய ஷாலினி..! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

1997 ஆம் ஆண்டு கேரளாவில் மல்லபுரத்தில் பிறந்தவர் தான் நடிகை ஷாலினி ஜோயா. இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். தற்போது வரையில் படங்களில் நடித்து வருகிறார்.

ராஜா மந்திரி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், கண்ணகி படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி கலக்கி வருகின்றார். இவர் தமிழும் மலையாளம் சேர்ந்து கதைக்கும் அழகு பலராலும் ரசிக்கப் பட்டு வருகின்றது.


இந்த நிலையில், இறுதியாக இடம்பெற்ற எபிசோட்டில், செஃப் தாமுவை மீண்டும் மரியாதை குறைவாக பேசி உள்ளார் ஷாலினி ஜோயா. தற்போது இந்த வீடியோக்கள் மிகவும் வைரலாகி வருகின்றன.

அதாவது ஷாலினி ஜோயாவின் இடத்திற்கு வந்த செஃப் தாமு, அவரின் மாவை கையில் எடுக்க, உனக்கு என்ன லூசா? அப்படி என்று கேட்டு விடுகின்றார். மேலும் தான் கடிப்பேன் என்று தனது செல்ல தமிழில் சொல்கின்றார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement